உத்திரமேரூர் ஏரிக்கரை மண்ணரிப்பை சீர் செய்யும் பணியில் பொதுப்பணித்துறை

உத்திரமேரூர் ஏரிக்கரை மண்ணரிப்பை சீர் செய்யும் பணியில் பொதுப்பணித்துறை

சீரமைப்பு பணிகள் 

உத்திரமேரூர் ஏரிக்கரை மண்ணரிப்பு சேதங்களை பொதுப்பணித்துறை ஊழியர்கள் மண் மூட்டை அடைத்து சீர் செய்து வருகின்றனர்.

ஏரிகளின் மாவட்டம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் மிக முக்கிய ஏரிகளில் ஒன்றான உத்திரமேரூர் ஏரி. 13 கிராமங்களுக்கு நீர் பாசனம் அளித்து ஐயாயிரம் ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் பயன்பெற்று வருகிறது. இந்த ஏரியை தூர்வாரவும் , கலிங்கல்கள் மதகுகள் உள்ளிட்டவைகளை பலப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கூட்டத்தில் பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில் உத்திரமேரூர் ஏரிக்கரை பருவமழை தொடங்குவதற்கு முன்னர் ரூபாய் 18 கோடி மதிப்பீட்டில் ஏரி கரைகள் மற்றும் மதகுகள் சீரமைப்பு பணி நடைபெற்றது.தற்போது உத்திரமேரூர் ஏரி நிரம்பி 20 அடி முழு கொள்ளளவை தாண்டி உபரி நீர் வெளியேறி வருகிறது. இந்நிலையில் மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக உத்திரமேரூர் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் புதிதாக சீரமைக்கப்பட்ட ஏரிக்கரைகளில் சில இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டு விரிசல் காணப்பட்டது.

இதையடுத்து மாவட்ட அதிகாரிகளின் ஆலோசனைப்படி பொதுப்பணித்துறை ஊழியர்கள் மண்ணரிப்பு ஏற்பட்ட இடங்களில் மண் மூட்டைகளை அடைத்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உத்திரமேரூர் ஏரிக்கு கடந்த ஒரு மாத காலமாகவே பெருக்கெடுத்து வரும் மழை காரணமாக செய்யாற்றில் இருந்து நீர் திருப்பப்பட்டு ஏரி முழு கொள்ளளவை எட்ட முழு முயற்சியை பொதுப்பணித்துறை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. மேலும், உத்திரமேரூர் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் ஏரிக்கரை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story