திருவாரூரில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

திருவாரூரில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

வாக்காளர் பட்டியல் வெளியீடு 

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. மாவட்டத்தில் 10,41,409 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2024 இறுதி வாக்காளர் பட்டியலினை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ வெளியிட்டார். வாக்காளர் பட்டியலில் 5 லட்சத்து 8,238 ஆண் வாக்காளர்கள் ,5 லட்சத்து 33,105 பெண் வாக்காளர்கள், 66 இதர வாக்காளர்கள் ஆக மொத்தம் 10,41,409 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர் . இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன் ,வருவாய் கோட்டாட்சியர்கள் சங்கீதா, கீர்த்தனா மணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story