இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

இறுதி வாக்காளர்  பட்டியல் வெளியீடு

வாக்காளர் பட்டியல் வெளியீடு 

திருக்கோவிலூர் மற்றும் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியலை கோட்டாட்சியர் கண்ணன் வெளியிட்டார். மொத்தம் 5 லட்சத்து 47,931 ஆயிரம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

தமிழகம் முழுவதும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடப்பட்டது. இதன் ஒருப்பகுதியாக கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் மற்றும் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி தொகுதிக்குட்பட்ட 2024 ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தல் இறுதி பட்டியல் திருக்கோவிலூரில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய் கோட்டாட்சியரும், தேர்தல் அலுவலருமான கண்ணன் தலைமையில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

இந்த இறுதி வாக்காளர் பட்டியலில் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் ஆண் 1,28,276 வாக்காளர்கள் பெண் 1,27,711 வாக்காளர்கள் மூன்றாம் பாலினத்தவர் 32 என மொத்தம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி மொத்த வாக்காளர்கள் 2,56,19 ஆகவும், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி மொத்த வாக்காளர்கள் ஆண் 1,47,442 வாக்காளர்கள் பெண் 1,44,419 வாக்காளர்கள் மூன்றாம் பாலினத்தவர் 51, உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி மொத்த வாக்காளர்கள் 2,91,912 மொத்தமாக இரண்டு சட்டமன்ற தொகுதியில் சேர்த்து 5,47,931 இருப்பதாக அதிகாரப்பூர்வமாகதெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story