ஆக்கிரமிப்பால் மாயமாகும் குட்டைகள்

ஆக்கிரமிப்பால் மாயமாகும் குட்டைகள்

செம்பரம்பாக்கம் ஏரி பாசன கால்வாய் செல்லும் வழித்தடத்தில் உள்ள குட்டைகளை கண்டறிந்து அவற்றை சீரமைத்து பாதுகாக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

செம்பரம்பாக்கம் ஏரி பாசன கால்வாய் செல்லும் வழித்தடத்தில் உள்ள குட்டைகளை கண்டறிந்து அவற்றை சீரமைத்து பாதுகாக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சென்னையின் குடிநீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. இந்த கரையில் எட்டு இடங்களில் விவசாய நிலத்திற்கு தண்ணீர் வெளியேற்றும் மதகுகள் அமைந்து உள்ளன. இந்த மதகுகளில் இருந்து பிரிந்து செல்லும் 16 பாசன கால்வாய்கள், குன்றத்துார், மாங்காடு, அய்யப்பன்தாங்கல், பரணிபுத்துார், கோவூர், சிக்கராயபுரம், கொல்லச்சேரி பகுதி வழியாக விவசாய நிலத்திற்கு செல்கின்றன. கெருகம்பாக்கம், கொளப்பாக்கம், மணப்பாக்கம், முகலிவாக்கம், தண்டலம், பழந்தண்டலம், திருமுடிவாக்கம் ஆகிய பகுதிகளின் வழியே சென்று விவசாய நிலத்திற்கு பயன்படுகிறது. கால்வாய் கடந்து செல்லும் பகுதியில், பல இடங்களில் குட்டைகள் இருந்தன. இவை ஆக்கிரமிக்கப்பட்டு பல குட்டைகள் மாயமாகி, வருவாய் பதிவேட்டிலே இல்லாமல் போய் விட்டது.

எஞ்சியுள்ள சில குட்டைகள், குன்றத்துார், கொல்லச்சேரி, மலையம்பாக்கம் உள்ளிட்ட சில பகுதிகளில் உள்ளன. இந்த குட்டைகள் பராமரிப்பின்றி உள்ளதால், இவையும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் சூழல் உள்ளது. எனவே, செம்பரம்பாக்கம் ஏரி பாசன கால்வாய் செல்லும் வழித்தடத்தில் உள்ள குட்டைகளை கண்டறிந்து அவற்றை சீரமைத்து பாதுகாக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்."

Tags

Next Story