பள்ளி மாணவர்களுக்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பாராட்டு

பள்ளி மாணவர்களுக்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பாராட்டு


கராத்தே போட்டியில் பதக்கங்கள் வென்ற மாணவர்களை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பாராட்டினார்.


கராத்தே போட்டியில் பதக்கங்கள் வென்ற மாணவர்களை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பாராட்டினார்.

ஜதராபாத்தில் கடந்த 10-ந் தேதி தேசிய அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஓமந்தூரில் உள்ள ஸ்ரீராம் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்கள் 15 பேர் கலந்து கொண்டு 7 தங்கம், 11 வெள்ளி மற்றும் 13 வெண்கலம் ஆகிய பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.

இதனையடுத்து ஐதராபாத்தில் இருந்து பள்ளிக்கு திரும்பி மாணவர்களுக்கு திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் உள்ள பஸ் நிலையத்தில் மேளதாளங்கள் முழங்க பள்ளி சார்பில் வரவேற்ப்பு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி தாளாளர் முரளி என்ற ரகுராமன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு மாலை அணிவித்து, நினைவு பரிசு வழங்கி பாராட்டி வரவேற்றார்.

பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு புதுச்சேரி மாநில முதல்-அமைச்சர் ரெங்கசாமியின் வீட்டுக்கு சென்றனர். அங்கு சாதனை புரிந்த மாணவர்களை முதல்-அமைச்சர் ரெங்கசாமி பாராட்டி வாழ்த்தினார். அப்போது பள்ளி முதல்வர் சுபாஷினி, ஆசிரியர்கள், பெற்றோர்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story