தந்தையை இழந்த மாணவிக்கு படிப்பு செலவை ஏற்ற புதுகை எம்எல்ஏ

தந்தையை இழந்த மாணவிக்கு படிப்பு செலவை ஏற்ற புதுகை எம்எல்ஏ

மாணவிக்கு உதவிய எம்எல்ஏ

ஆதனகோட்டையில் தந்தையை இழந்த மாணவிக்கு படிப்பு செலவை ஏற்ற புதுகை எம்எல்ஏ.

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் சொந்த பிரச்சனை காரணமாக இளங்கோவன் என்ற நபர் ஒருவர் மனம் உடைந்து மரணமடைந்த நிலையில், அவரது குடும்பம் கடும் பொருளாதார நெருக்கடியில் இருப்பதாகவும்,

தந்தையை இழந்த சிறுமி அபிநயா பொருளாதார நெருக்கடியினால் கல்வியை தொடர முடியாமல் தனது தாய் கோகிலாவை பிரிந்து தாய் மாமாவின் அரவணைப்பில் வாழ்வாதாரத்திற்காக புதுக்கோட்டையில் முந்திரி வியாபாரம் செய்து வருவதை சமூக வலைதளம் வாயிலாக கடந்த வியாழக்கிழமை (09/05/2024) அன்று அறிந்த புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா நேரடியாக அப்பகுதிக்கு விரைந்து சிறுமியின் குடும்ப நிலை குறித்து கேட்டறிந்து,

அரசு சார்பாக என்ன உதவி செய்ய முடியுமோ அதை செய்வதாக உறுதி அளித்ததோடு, கல்வியில் இடைநிற்றல் இருக்கக் கூடாது என்பதை அறிவுறுத்தி அச்சிறுமியை விடுதி (HOSTEL) வசதியோடு அமைந்துள்ள ஆர்.சி அரசு உதவி பெறும் உயர் துவக்கப்பள்ளி பள்ளியில் (15/05/2024) அன்று நேரடியாக சென்று சேர்த்துவிட்டது மட்டுமல்லாது அச்சிறுமிக்கு பாதுகாவலராகவும் (Guardian) தனது பெயரை பள்ளியில் வழங்கி அச்சிறுமி தொடர்ந்து கல்விகற்க தான் உதவுவதாக புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை. முத்துராஜா உறுதி அளித்தார்.

இது போல் பொதுமக்களுக்கு பல சமூக சேவைகளை செய்து வரும் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜாவை பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story