வாகவாசல் ஊராட்சியில் கிரிக்கெட் போட்டியை துவங்கி வைத்த புதுகை எம்எல்ஏ

X
கிரிக்கெட் போட்டியை துவக்கி வைத்த எம்எல்ஏ
வாகவாசல் ஊராட்சியில் கிரிக்கெட் போட்டியை புதுகை எம்எல்ஏ துவக்கி வைத்தார்.
புதுக்கோட்டை தெற்கு ஒன்றியம் வாகவாசல் ஊராட்சியில் இன்று 27/05/2024 தட்டாம்பட்டி இளைஞர்களால் நடத்தப்பட்ட 12ம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் போட்டியை துவக்கிவைத்து வெற்றி பெற்ற அணிக்கு பரிசுகளை புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை. முத்துராஜா வழங்கி வாழ்த்தினார்.
இந்நிகழ்வின் போது கிரிக்கெட் வீரர்கள் மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் தட்டாம்பட்டி கருப்பையா, மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் அன்புசெல்வம் உள்ளிட்டோரும், திமுக நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.
Next Story
