புதுக்கோட்டை மாவட்டத்தில் 106.40 மி.மீ மழை பதிவு

X
மழை
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஓரளவு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 106.40 மில்லி மீட்டர் மழை பெய்ததாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் மிக அதிக அளவில் கடலோரப் பகுதியான மீமிசலில் 19.80 மில்லிமீட்டர் மழை பெய்ததாகவும், மாவட்டத்தின் மிக குறைந்த அளவாக கந்தர்வக் கோட்டையில் ஒரு மில்லி மீட்டர் மழை பெய்ததாக, வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. தற்போது பொங்கலுக்காக கரும்பு ,மஞ்சள் பயிரிட்ட நிலையில் இந்த மழை விவசாயிகளுக்கு பயன்படும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story
