புதுக்கோட்டை நகராட்சி ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் முற்றுகை போராட்டம்

புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் உள்ள நகராட்சி 7வது டிவிஷன் வார்டு அலுவலத்தை ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்

புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் உள்ள நகராட்சி 7வது டிவிஷன் வார்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு மாத மாதம் தங்களுக்கு சம்பளங்கள் முறையாக வழங்க வேண்டும் துப்புரவு பணி செய்யும் தங்களுக்கு முறையாக உபகரணங்கள் வழங்க வேண்டும் பிஎப் இஎஸ்ஐ பிடித்த பணத்தை முறையாக வழங்க வேண்டும் என கோரிக்கையை வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட புதுக்கோட்டை நகராட்சி ஒப்பந்த துப்புரவு பணியாளர்களால் புதிய பேருந்து நிலையம் வளாகத்தில் பரபரப்பு புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 42 வார்டுகளிலும் துப்புரவு பணி செய்வதற்காக தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் 288 துப்புரவு ஒப்பந்த பணியாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.

இவர்களுக்கு தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் சார்பில் மாத மாதம் 12,000 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது இந்நிலையில் முறையாக சம்பளம் வழங்கவில்லை என கூறி அடிக்கடி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் போராட்டம் நடத்திய பிறகு தனியார் நிறுவனத்தின் சார்பில் சம்பளம் வழங்குவது தொடர் கதையாக இருந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த ஒன்றரை மாதமாக சம்பளம் வழங்காததை கண்டித்து புதுக்கோட்டை பேருந்துநிலையத்தில் உள்ள புதுக்கோட்டை நகராட்சி 7வது டிவிசன் வார்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு 288 ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் தங்களுக்கு சம்பளத்தை உடனடியாக இன்றைய வழங்க வேண்டும் அதேபோல் பிஎப் இ எஸ் ஐ பிடித்த பணத்தை முறையாக வங்கியில் செலுத்த வேண்டும் துப்புரவு பணி செய்யும் தங்களுக்கு கிளவுஸ் துடைப்பம் குப்பைகளும் உபகரணங்கள் உள்ளிட்டவைகளை வழங்க வேண்டும் என கோரிக்கை வலியுறுத்தி அலுவலகத்தை முற்றியிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டது

நகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் தற்பொழுது பணி செய்யாமல் பணியை புறக்கணித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story