லோக் அதலாத் விசாரணை நீதிமன்றம் தொடக்கம்

லோக் அதலாத் விசாரணை நீதிமன்றம் தொடக்கம்

சிறப்பு நீதிமன்றம் திறப்பு

தேசிய சட்டப்பணிகள் ஆணையம் மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணையத்தின் உத்தரவின்படி நீதிமன்றம் திறப்பு.

புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் தலைவர்/முதன்மை மாவட்ட நீதிபதி பூரண ஜெய ஆனந்த் புதுக்கோட்டை மாவட்டத்திற்கான தேசிய மக்கள் நீதிமன்ற (லோக் அதலாத்) விசாரணை அமர்வுகளை புதுக்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வைத்து துவங்கி வைத்தார்.

தேசிய சட்டப்பணிகள் ஆணையம் மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணையத்தின் உத்தரவின்படி திறந்த நீதிமன்றத்தில் குடும்ப நல மாவட்ட நீதிபதி ஜெயந்தி, கூடுதல் மாவட்ட நீதிபதி வசந்தி, அத்தியாவசிய பண்டங்கள் மற்றும் போதை பொருள் தடுப்பு நீதிமன்ற சிறப்பு மாவட்ட அமர்வு நீதிபதி பாபுலால், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி பிச்சை, முதன்மை சார்பு நீதிபதி சசிகுமார், மாவட்ட உரிமையியல் நீதிபதி பூர்ணிமா, குற்றவியல் நீதித்துறை நடுவர் எண். 1 ஜெயந்தி, வழக்கறிஞர் சங்க தலைவர் சின்னராசு, புதுக்கோட்டை மாவட்ட குற்றவழக்கு எதிர்வாத சட்ட உதவி அமைப்பின் தலைமை வழக்கறிஞர்ஷேக்திவான், துணை தலைமை வழக்கறிஞர்கள் மதியழகன், வு. அங்கவி, உதவி வழக்கறிஞர்கள் மணிகண்டன் மற்றும் யசோதா மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story