புதுப்பட்டி உடையபிராட்டி அம்மன் கோயில் மாம்பழத் தேரோட்டம்!

புதுப்பட்டி உடையபிராட்டி அம்மன் கோயில் மாம்பழத் தேரோட்டம்.
பொன்னமராவதி அருகே உள்ள புதுப்பட்டி உடையபிராட்டி அம்மன் கோயில் மாம்பழத் தேரோட்டம் நடைபெற்றது. பிரசித்தி பெற்ற இக்கோயிலில் மே14-ஆம் தேதி தேரோட்ட விழா தொடங்கியது. இதையடுத்து தினமும் அம்மன் வீதியுலா மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அம்மன் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து முன்னாள் பேரூராட்சித் தலைவர் ஆர்.எம்.ராஜா தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கிவைத்தார். இதயைடுத்து பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரதவீதியில் தேர் வலம் வந்தபோது அங்கிருந்த வீடுகளின் மாடிகளில் இரு தேரோட்டத்தில் கலந்துகொண்ட பக்தர்களை நோக்கி மாங்கனிகள் வீசப்பட்டது. அப்பழங்களை பக்தர்கள் பெற்றுச்சென்றனர். விழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை பொன்னமராவதி போலீஸார் மற்றும் தீயணைப்புத்துறையினர் செய்திருந்தனர்.

Tags

Next Story