மலையம்மன் கோவிலில் உலக நலன் வேண்டி பூஜை

மலையம்மன் கோவிலில் உலக நலன் வேண்டி பூஜை
X

மலையம்மன் 

தியாகதுருகம் மலையம்மன் கோவிலில் உலக நலன் வேண்டி சிறப்பு பூஜை நடந்தது.
வரலாற்று சிறப்புகள் கொண்ட தியாகதுருகம் மலை உச்சியில் மலையம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் உலக நலன் வேண்டி நேற்று சிறப்பு பூஜை நடந்தது. விநாயகர் வழிபாட்டுக்குப்பின் 16 வகை மங்கல பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. சர்வ அலங்காரத்தைத் தொடர்ந்து மகாசங்கல்பம் செய்து வைக்கப்பட்டது. 8 வகை புஷ்பங்களால் சுவாமியை அலங்கரித்து லலிதா சகஸ்ரநாம மந்திரங்களை வாசித்து மகா தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சாமிநாத குருக்கள் பூஜைகளை செய்தார்.

Tags

Next Story