அம்மன் கோவிலில் கூழ் வார்த்தல் திருவிழா

அம்மன் கோவிலில் கூழ் வார்த்தல் திருவிழா

கூழ் வார்த்தல் 

அச்சிறுப்பாக்கம் அருகே அம்மன் கோவிலில் கூழ் வார்த்தல் திருவிழா நடைபெறுகிறது.

அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட முருங்கை ஊராட்சியில், தண்டுமாரியம்மன், கங்கை அம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் விழா, நேற்று விமரிசையாக நடந்தது. இக்கோவிலில், ஆண்டுதோறும், வைகாசி மாதம் அம்மனுக்கு கூழ் வார்த்தல் நிகழ்வு விமரிசையாக நடைபெறும்.

கடந்த, 9ம் தேதி, தண்டு மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு காப்பு அணிவித்தல் நிகழ்ச்சி துவங்கி, யது. பின், மூன்று நாட்களாக, அலங்கரிக்கப்பட்ட அம்மன் கரகம், முக்கிய வீதிகளில் உலா வந்தது. முக்கிய நிகழ்வான நேற்று, காத்தவராயன் சுவாமி ஊர்வலம் நடந்தது.அதனைத் தொடர்ந்து, காலை அம்மனுக்கு சொர்ண அபிஷேகம் மற்றும் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

மதியம் ஒரு மணி அளவில், அம்மன் வீதி உலா நடந்தது. பின், மாலை 3:00 மணிக்கு கங்கை அம்மன், தண்டுமாரியம்மனுக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடை பெற்றது. இரவு, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், விநாயகர்,தண்டு மாரியம்மன்,முத்தாலம்மன் வீதி உலா நடந்தது. வீடுகள்தோறும் பெண்கள் கற்பூரம் ஏற்றி, ஆரத்தி எடுத்து அம்மனைவழிபட்டனர்.

Tags

Next Story