சாலை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொம்பலாட்டம் நிகழ்ச்சி

சாலை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொம்பலாட்டம் நிகழ்ச்சி

பொம்மலாட்டம்

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்அரசுப் பள்ளியில் சாலை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொம்பலாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.

சாலை போக்குவரத்து விதிகளை மதிப்போம் என்பதை வலியுறுத்தி பொம்மலாட்டம் நிகழ்ச்சி குமாரபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக வட்டார போக்குவரத்து அலுவலர் திருமதி.பூங்குழலி மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் திரு.சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர் இவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. ஆடலரசு வரவேற்று கௌரவித்தார்.

மேலும், பொம்மலாட்ட நிகழ்ச்சியை திரு. சீனிவாசன் திருமதி.செல்வி ஆகியோரின் தலைமையில் சிறப்பாக மாணவர்களுக்கு பொம்மலாட்ட கதைகள் மூலம் சுமார் ஒன்றரை மணி நேரம் எடுத்துக் கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாணவர்களின் பாவனை நடிப்பு மற்றும் நாடகம் நடைபெற்றது. இவற்றை மாணவர்கள் அனைவரும் உற்சாகத்துடன் கண்டுகளித்தார்கள்.

இறுதியில் மாணவர்களிடையே கேள்விகள் கேட்கப்பட்டு அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் சால்வை அணிவித்து கௌரவப்படுத்தினார்கள். மேலும் ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள், இருபால் ஆசிரியர் பெருமக்கள். 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்ச்சியை என்.சி.சி அலுவலர் அந்தோணிசாமி, கவிராஜ் ஆகியோர் உடனிருந்து ஏற்பாடுகள் செய்தனர்.

Tags

Next Story