புரவி எடுப்பு விழா

புரவி எடுப்பு விழா

நத்தம் அருகே இடையபட்டியில் சுவாமிகளின் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.

நத்தம் அருகே இடையபட்டியில் சுவாமிகளின் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே இடையபட்டியில் சுவாமிகளின் புரவி எடுப்பு திருவிழா நடந்தது. கடந்த 28ல் அழகர்மலையில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருக்க துவங்கினர். திருவிழாவின் முக்கிய நிகழ்வான புரவி எடுப்பு விழா இன்று நடைபெற்றது. இதற்காக வத்திபட்டி பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஶ்ரீ கருப்பசாமி, ஶ்ரீ வேட்டை வீரன் சாமி கண் திறக்கப்பட்டு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. பின்னர் சுவாமி சிலைகள் அனைத்தும் வர்ணகுடைகள், தீவட்டி பரிவாரங்களுடன் வானவேடிக்கைகளோடு வத்திபட்டியில் இருந்து சுவாமிகள் ஊர்வலமாக சென்று இடையபட்டி கோவில் இருப்பிடம் போய் சேர்ந்தது.

Tags

Next Story