ஏ.விளாக்குளத்தில் புரவி எடுப்பு விழா - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

ஏ.விளாக்குளத்தில் புரவி எடுப்பு விழா - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

புரவி எடுப்பு விழா

ஏ.விளாக்குளத்தில் மழை வேண்டி நடைபெற்ற புரவி எடுப்பு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் விளாக்குளம் கிராமத்தில் மழை பெய்ய வேண்டி புரவி எடுப்பு விழா நடைபெற்றது. ஏ.விளாக்குளம் கிராமத்தில் உள்ள நிறைகுளத்து அய்யனார் கோயிலுக்கு அந்த கிராம மக்கள் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், திருமணமாகாத ஆண்கள், பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டியும் அய்யனாரை வேண்டி புரவி எடுப்பு விழா நடத்துவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு விழாவை முன்னிட்டு ஏ.விளாக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கிராமத்திலிருந்து ஊர்வலமாக வந்து மானாமதுரையில் தயார் நிலையில் செய்து வைக்கப்பட்டிருந்த புரவிகளுக்கும், பொம்மைகளுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தினர். அதன்பின் புரவிகள் ஊர்வலமாக நிறைகுளத்து அய்யனார் கோயிலுக்கு மேல தாளங்கள் முழங்க ஆடிப்பாடி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் எடுத்து சென்றனர்

Tags

Next Story