சிங்கம்புணரி அருகே புரவி எடுப்பு விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

சிங்கம்புணரி அருகே புரவி எடுப்பு விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

புரவி எடுப்பு விழா

செகுட்டு அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு விழா நடைபெற்ற நிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே உள்ள மு.சூரக்குடியில் அருள்மிகு ஸ்ரீசெகுட்டு அய்யனார், சிறை மீட்ட அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

நல்ல மழை பொழிந்து விவசாயம் செழிக்கவும், கிராம மக்கள் ஒற்றுமையோடு வாழ இந்த புரவி எடுப்பு திருவிழாவை கிராமத்தினர் ஆண்டுதோறும் நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ புரவி எடுப்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

புரவி பொட்டலில் அலங்கரிக்கப்பட்ட 300-க்கும் மேற்பட்ட மண் குதிரைகள் மற்றும் காளைகளுக்கு பூமாலைகள், பட்டு வஸ்திரங்கள் கொண்டு அலங்கரித்து வழிபாடு நடத்தினர். அதன் பின்பு அங்கு சாமியாட்டம் நடைபெற்றது. அதனையடுத்து பறை இசை முழங்க முதலில் அரண்மனை புரவிகள் 2 மற்றும் நேர்த்திக்கடன் புரவிகள், காளைகள், போன்றவைகளை புரவி பொட்டலில் இருந்து பழமை மாறாமல், பறை இசை, கொம்பு இசை முழங்க புரவிகளை முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் தோளில் சுமந்து சென்றனர்.

பக்தர்கள் புரவிகளை மிகுந்த ஆரவாரத்துடன் அய்யனார் கோவிலில் இறக்கி வைத்து தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தி வழிபட்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்

Tags

Next Story