பொது சொத்து கிரயம் - சகோதரர்களை கண்டித்து சாலை மறியல்

பொது சொத்து கிரயம் - சகோதரர்களை கண்டித்து  சாலை மறியல்

சாலை மறியல் 

மயிலாடுதுறை அருகே ஊர் பொது சொத்தை ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் மோசடியாக கிரயப் பத்திரம் தயார் செய்து விற்பனை செய்ய முயற்சிப்பதை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடந்தது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மாதிரிமங்கலம் கிராமத்தில் சிரசாயி மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான சொத்து 72.5 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த சொத்து 70 நபர்களின் பெயரில் உள்ளது. ஆனால் அது கிராமத்து சொத்தாகும். இந்த கோயிலை கடந்த 2017-ஆம் ஆண்டு கிராம மக்கள் செலவு செய்து கும்பாபிஷேகம் நடத்தியுள்ளனர். இந்த கோயிலுக்கு கும்பாபிஷேகத்தை நடத்தும் செலவுக்காக கோயில் இடத்தை அதே பகுதியை சேர்ந்த சந்திரகாசு மகன்களான ராஜேந்திரன், மாணிக்கம் மற்றும் கருணாநிதி சகோதரர்களுக்கு கிராம மக்கள் விற்பனை செய்ததை போன்று போலி ஆவணங்களை தயார் விற்பனை செய்ய முயற்சி செய்வதாகவும் குற்றம் சாட்டி கிராம மக்கள் 150 க்கு மேற்பட்டோர் மயிலாடுதுறை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து குத்தாலம் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் சம்பந்தப்பட்ட நபர் வெளியூரில் இருப்பதால் அவரை வரவழைத்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். அதன் பிறகு போராட்டம் கைவிடப்பட்டது இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருந்தது.

Tags

Next Story