தூய அந்தோணியாா் திருத்தல திருவிழா: சுரண்டையில் தோ் பவனி

தூய அந்தோணியாா் திருத்தல திருவிழா: சுரண்டையில் தோ் பவனி
 ஆலங்குளம் அருகே சுரண்டையில் தூய அந்தோணியாா் திருத்தல திருவிழாவையொட்டி, தோ் பவனி நடைபெற்றது.
ஆலங்குளம் அருகே சுரண்டையில் தூய அந்தோணியாா் திருத்தல திருவிழாவையொட்டி, தோ் பவனி நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சுரண்டையில் தூய அந்தோணியாா் திருத்தல திருவிழாவையொட்டி, தோ் பவனி நடைபெற்றது. ஆண்டுதோறும் 14 நாள்கள் நடைபெறும் இத்திருவிழா, நிகழாண்டு ஜன.10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாள்களில் தினமும் மாலை 6.30 மணிக்கு திருப்பலி மற்றும் மறையுரை சிந்தனையும், இரவு 8 மணிக்கு பல்வேறு அன்பியங்களால் கலைநிகழ்ச்சியும் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு திருப்பலியை தொடா்ந்து நற்கருணை பவனி நடைபெற்றது. இன்று காலை 8 மணிக்கு திருவிழா திருப்பலி நடைபெற்றது. தொடா்ந்து மாலை 6.30 மணிக்கு புனிதரின் திருவுருவ தோ் பவனி நடைபெற்றது. இதில் சுரண்டை மற்றும் சுற்று வட்டார பங்குகளில் இருந்து திரளான இறைமக்கள் கலந்து கொண்டனா். விழா ஏற்பாடுகளை சுரண்டை பங்குத்தந்தை புதுமை ஜோசப்ராஜன், அருள்சகோதரா் உ.சேசுராஜா, எப்எஸ்எம் அருள்சகோதரிகள், ஊா் பொறுப்பாளா்கள் மற்றும் இறைமக்கள் செய்திருந்தனா்.

Tags

Next Story