புஷ்ப பல்லாக்கு விடையாற்றி விழா

புஷ்ப பல்லாக்கு விடையாற்றி விழா

பாபநாசம் திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோவிலில் புஷ்ப பல்லாக்கு விடையாற்றி விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


பாபநாசம் திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோவிலில் புஷ்ப பல்லாக்கு விடையாற்றி விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசம் வட்டம்,திருப்பாலைதுறையில் உள்ள ஸ்ரீதவளவெண்ணகை அம்மன் உடனுறை ஸ்ரீ பாலைவனநாதர் கோயிலில் புஷ்ப பல்லக்கு,விடையாற்றி விழா நடைபெற்றது. கோயிலில் சித்திரை மாத பௌர்ணமி பிரம்மோத்சவ விழா கடந்த ஏப்.14 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.தொடர்ந்து தினசரி காலை, மாலை வேளைகளில் உபயதாரர்களால் சுவாமி,அம்மன் அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்றது. இதனை அடுத்து அலங்கரிக்கப்பட்ட பஷ்ப பல்லக்குகளில் சுவாமி,அம்மன் வீதி உலாவும் சுவாமிக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சியும் சிறுவர் சிறுமியர்களின் சிலம்பாட்ட நிகழ்ச்சியும் வான வேடிக்கைகளும் நடைபெற்றது. தொடர்ந்து கோயிலில் விடையாற்றி விழா நடைபெற்றது. விழாவில் கோயில் செயல் அலுவலர் இரா.விக்னேஷ்,தக்கார் க.லட்சுமி, பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன் பேரூராட்சி கவுன்சிலர்கள் புஷ்பா சக்திவேல் ,கீர்த்தி வாசன், கணக்கர் சங்கரமூர்த்தி, திருப்பாலைத்துறை சிவ பேரவை தலைவர் வேலுச்சாமி செயலாளர் ராஜாராமன் பொருளாளர் ராஜேஷ் மற்றும் பக்தர்கள்,ஆன்மீக ஆர்வலர்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பாபநாசம் சிவப் பேரவையினர் செய்திருந்தனர்.

Tags

Next Story