புஷ்பரத ஏரி திருவிழா; உண்டியல் காணிக்கை ரூ.9½ லட்சம்

புஷ்பரத ஏரி திருவிழா; உண்டியல் காணிக்கை ரூ.9½ லட்சம்

வல்லண்டராமம் பொற்கொடி அம்மன் ஏரி திருவிழாவில் உண்டியல் காணிக்கையாக ரூ.9.5 லட்சம் வசூலானதாக கோவில் செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

வல்லண்டராமம் பொற்கொடி அம்மன் ஏரி திருவிழாவில் உண்டியல் காணிக்கையாக ரூ.9.5 லட்சம் வசூலானதாக கோவில் செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வல்லண்டராமம் பொற்கொடி அம்மன் ஏரி திருவிழா கடந்த 7 மற்றும் 8-ந் தேதி நடந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொண்டனர். விழாவையொட்டி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 25 இடங்களில் உண்டியல் வைக்கப்பட்டு இருந்தது.

இதில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக காணிக்கை செலுத்தினர். அவர்கள் செலுத்திய காணிக்கை நேற்று வல்லாண்டராமம் கோவில் வளாகத்தில் செயல் அலுவலர் அண்ணாமலை, மேலாளர் ஆறுமுகம், மேட்டுக்குடிகள் முன்னிலையில் எண்ணப்பட்டது அதில் ரூ.9,51,693 பணம், 12 கிராம் தங்கம், 272 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர் என கோவில் செயல் அலுவலர் அண்ணாமலை தெரிவித்தார்.

Tags

Next Story