புத்து மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா - பால்குட ஊர்வலம்

புத்து மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா -  பால்குட ஊர்வலம்

பால்குட ஊர்வலம் 

சேலம் பொன்னம்மாப்பேட்டை புத்துமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி திரளான பெண்கள் பால்குடத்தை ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர்.

சேலம் பொன்னம்மாப்பேட்டையில் உள்ள புத்துமாரியம்மன் கோயிலில் சித்திரை மாத திருவிழா கடந்த 14ம் தேதி முகூர்த்தக்கால் நடுதல் நிகழ்ச்சியோடு தொடங்கியது. கடந்த 23ம் தேதியன்று அம்மனுக்கு பூச்சாட்டுதல் வெகு விமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து நேற்று இரவு சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. இதனையொட்டி பொன்னமாபேட்டை பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண் பக்தர்கள் பால்குடம் எடுத்துக் கொண்டு ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர்.

தொடர்ந்து புத்துமாரியம்மனுக்கு பாலபிஷேகம் நடத்தப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். மேலும் சக்திகரகம் நிகழ்ச்சியும், நாளை காலை பொங்கல் வைபவம், அக்னி கரகம், அழகு குத்துதல், மாவிளக்கு ஊர்வலம் ஆகியவை நடைபெறவுள்ளது. நாளை மறுநாள் வானவேடிக்கையுடன் புஷ்ப பல்லக்கில் புத்துமாரியம்மன் சத்தாபரணம் நிகழ்ச்சி விமரிசையாக நடத்தப்படவுள்ளது. வரும் 4ம்தேதியன்று மஞ்சள் நீராட்டு விழா மற்றும் அம்மன் பவனி வருதல் நிகழ்ச்சியுடன் நிறைவு பெறுகிறது.

Tags

Next Story