புற்று மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா
புற்று மாரியம்மன் கோவில் திருவிழா
சேலம் மாவட்டம், சாமியார் கிணறு பகுதியில் உள்ள புற்று மாரியம்மன் கோவிலில் பொங்கல் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே சாமியார் கிணறு பகுதியில் உள்ள புற்று மாரியம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா சக்தி அழைத்தலுடன் தொடங்கியது. பக்தர்கள் பொங்கல் வைத்தும் அக்னி கிரகம், பூங்கரகம் எடுத்து ஆடி வந்தனர். பின்னர் அம்மனை அலங்கரித்து ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
தொடர்ந்து அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், தேன், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. வசிஷ்ட நதியில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதில் சாமியார் கிணறு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பெண்கள் பங்கேற்று பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். விழாக்குழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story