பதுங்கியிருந்த 8 அடி நீள மலைப்பாம்பு, பிடித்து காப்பு காட்டில் விட்ட வனத்துறையினர்

பதுங்கியிருந்த 8 அடி நீள மலைப்பாம்பு, பிடித்து காப்பு காட்டில் விட்ட வனத்துறையினர்
X

பிடிபட்ட மலைப்பாம்பு

கொல்லிமலை சோளக்காட்டு உழவர் சந்தையின் அருகே பதுங்கிருந்த மலை பாம்பை வனத்துறையினர் மீட்டு காப்பு காட்டில் விடுவித்தனர்.

சேந்தமங்கலம் அருகே கொல்லிமலை சோளக்காட்டில் பழங்குடியின மக்களின் உழவர் சந்தை அமைந்துள்ளது. உழவர் சந்தையின் அருகே மலைபாம்பு பதுங்கி இருந்தது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து மாவட்ட வன அலுவலர் ராஜாங்கத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கொல்லிமலை வன சரகர் சிவானந்தம் தலைமையில் செங்கரை வனகாப்பாளர் கருணாநிதி, வாளவந்திநாடு வனகாவலர் சுரேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சுமார் 8 அடி நீளமுள்ள மலைபாம்பை மீட்டு, நாச்சியம்மன் கோவில் அருகே உள்ள வன காப்பு காட்டில் விட்டனர்.

Tags

Next Story