கேலோ விளையாட்டு போட்டிக்கு தேர்வு: அரசு பள்ளி மாணவனுக்கு பாராட்டு

கேலோ விளையாட்டு போட்டிக்கு தேர்வு: அரசு பள்ளி மாணவனுக்கு பாராட்டு

பாராட்டு விழா

அகில இந்திய கேலோ விளையாட்டுப் போட்டியில் தமிழக கோகோ அணியில் விளையாட தேர்வு செய்யப்பட்ட சேலம் அரசு பள்ளி மாணவரை பல்வேறு தரப்பினரும் பாராட்டினர்.
சேலம் அயோத்தியாப்பட்டணம் அருகே வலசையூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 12-ம் வகுப்பு மாணவன் அஜய்குமார், அகில இந்திய கேலோ விளையாட்டுப் போட்டியில் தமிழக கோகோ அணியில் விளையாட தேர்வு பெற்றுள்ளார். அஜய்குமாருக்கு வலசையூர் பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியர் பி.ஜெயலேந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் அருண்குமார், ஊராட்சி தலைவர் செல்வராணி பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக உடற்கல்வி ஆசிரியர் அன்பன் டேனியல் வரவேற்றார். மாணவர் அஜய்குமாரை பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சி.பி.வைத்திலிங்கம் பாராட்டி பரிசும் சான்றிதழும் வழங்கினார். 19 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான பூப்பந்து போட்டியில் மாவட்ட அளவிளான 3-ஆம் இடம் பிடித்த மாணவன் தாமரைச்செல்வன், மாநில அளவிலான தடகள போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். கேரம் இரட்டையர் பிரிவில் ஸ்ரீதர், சபரிமுத்து ஆகியோர் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தனர். ஜனவரி 18, 19, 20-ந் தேதிகளில் ராணிப்பேட்டையில் நடைபெறும் மாநில போட்டியில் இந்த மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள். தேசிய, மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு ஆடிட்டர் இளங்கோவன் விளையாட்டுக்கான பிரத்யேக சீருடைகளை வழங்கினார். விழாவில் உடற்கல்வி ஆசிரியர்கள் யோகநாதன், ஸ்டாலின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story