அம்ருத்.2 திட்டத்தின் கீழ் தரமான (எச்.டி.பி.ஈ) பைப் லைன்

அம்ருத்.2 திட்டத்தின் கீழ் தரமான (எச்.டி.பி.ஈ) பைப் லைன்

காஞ்சிபுரத்தில் அம்ருத்.2 திட்டத்தின் கீழ் பைப் லைன் அமைக்கும் பணியை பேரூராட்சி சேர்மன் யுவராஜ் துரை பணிகளை பார்வையிட்டார்.


காஞ்சிபுரத்தில் அம்ருத்.2 திட்டத்தின் கீழ் பைப் லைன் அமைக்கும் பணியை பேரூராட்சி சேர்மன் யுவராஜ் துரை பணிகளை பார்வையிட்டார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இவ்வார்டுகளுக்குட்பட்ட பகுதிகளில் தாமதமின்றி விரைவில் குடிநீர் வழங்கும் விதமாக தரமான பைப் லைன் அமைத்திட திருக்கழுக்குன்றம் பேரூராட்சி சேர்மன் பொறியாளர் யுவராஜ் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தினை துவக்கி வைத்த விழாவில் கலந்துக் கொண்ட தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் தரமான பைப் லைன் அமைக்கும் அம்ருத் . 2 பணிக்கான அடிக்கல் நாட்டினார்.

இந்நிலையில்பேரூராட்சிக்குட்பட்ட சுமார் 65 கிமீ நீளத்திற்கு 29 கோடியே 93 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அம்ருத் – 2 தீட்டத்தின் மூலம் தரமான உயர் அடர்த்தி பாலி எதிலீன் (எச்.டி.பி.ஈ) 90 மி.மீ பைப் 1 மீட்டர் ஆழத்திலும் மேல் பகுதியில் 110 முதல் 160 மி.மீ வரையிலான பைப்களும் அமைக்கும் பணிகள் துவங்கின பேரூராட்சி சேர்மன் பொறியாளர் யுவராஜ் துரை பணிகளை பார்வையிட்டார்.

இதுகுறித்து பேரூராட்சி சேர்மன் யுவராஜ் கூறுகையில் பைப் லைன் அமைக்கும் பணிகளை ட்ரான்ஸ்ட்ரோய் இந்தியா லிமிடெட் நிறுவனம் செய்து வருவதாகவும் மேலும் பேரூராட்சிக்குட்பட்ட வகாப் நகரில் 2.5 லட்சம் லிட்டர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியும் அதே போன்று இந்திரா நகரில் 1 லட்சம் லிட்டர் நால்வர் கோயில்பேட்டை பகுதியில் 1 லட்சம் லிட்டர், வடக்குபட்டு பகுதியில் 60 ஆயிரம் லிட்டர் என மேல் நிலை நீர்தேக்க தொட்டிகள் விரைவில் அமைக்கப்பட உள்ளதாகவும், திருக்கழுக்குன்றம் பேரூராட்சி பகுதிக்கு நீர் வழங்கும் வல்லிபுரம் பாலாற்று படுகையில் 4 நீர் உறிஞ்சும் கிணறுகள் அமைக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்தவர் வல்லிபுரம் பாலாற்றில் இருந்து நாவலூர் நீரேற்றம் வரை 1967 ஆம் ஆண்டு போடப்பட்ட பைப்கள் பழுதடைந்துள்ளதால் அதனை நீக்கிவிட்டு புதிதாக 250மி.மீ டி.ஐ ( டக்ட் அயர்ன்)பைப் லைன் அமைக்கப்பட இருப்பதாகவும் கூறினார்.

நிகழ்ச்சியில் வார்டு கவுன்சிலர் தனசேகர், திமுக நிர்வாகிகள் ரமேஷ், ராஜி, மனோகரன், ட்ரான்ஸ்ட்ரோய் இந்தியா லிமிடெட் நிறுவன ஒருங்கிணைப்பாளர் ஜெயசீலன், நில அளவையர் சுபின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story