குவாரி வெடி விபத்து: கலெக்டரிடம் மனு

குவாரி வெடி விபத்து எதிரொலியாக குவாரியை நிரந்தரமாக மூட வேண்டும் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கலெக்கடரிடம் மனு அளிக்கப்பட்டது.
டி. கடமங்குளம் கிராமத்தில் நேற்று நடந்த குவாரி வெடி விபத்து எதிரொலி குவாரியை நிரந்தரமாக மூட வேண்டும் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கூறி ஆட்சியரிடம் மனு அளித்தனர் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே டி கடம்பன்குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாகவும் இந்த பகுதியில் செயல்பட்டு வரும் ஆர் எஸ் ஆர் கல்குவாரியில் நேற்று நடந்த வெப்பத்தில் மூன்று தொழிலாளிகள் உடல் சிதறி உயிரிழந்தனர் இந்த வெடிவிபத்தின் காரணமாக டி.கடம்பன்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் வசிக்கும் பொது மக்களின் வீடுகள் பலத்தை சேதமடைந்ததாகவும் இந்த கல்குவாரி தொடர்ந்து முறைகேடாக இயங்கி வருவதாகவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை புகார் அளித்தும் யாரும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இதன் காரணமாகவே நேற்று இந்த விபத்து நடைபெற்று இருப்பதாகவும் இந்த கல்குவாரியில் உள்ள மருந்து வைக்கும் அரை குடோனாக செயல்படுவதால் பெரிய அளவில் சேதம் ஏற்படுவதாகவும் எனவே இந்த கல்குவாரியை நிரந்தரமாக மூட வேண்டும் குவாரியின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் வெடி விபத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி டீ கடம்பன்குளத்தை சார்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்திருந்தனர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இல்லாத காரணத்தினால் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தித்து மனு அளித்து சென்றனர்.

Tags

Next Story