வேளாண்துறை சார்பில் விவசாயிகளுக்கு ராபி பருவ பயிற்சி

வேளாண்துறை சார்பில் விவசாயிகளுக்கு ராபி  பருவ பயிற்சி
  ராபி பருவ பயிற்சி 

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டாரம் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை 2023 -24 கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கிராம அளவிலான வேளாண் முன்னேற்றக் குழு ராபி பருவ பயிற்சி நடைபெற்றது. சித்தாத்தூர் மற்றும் அரிகரப்பாக்கம் கிராமங்களில் 25‌ விவசாயிகளைக் கொண்ட குழுவிற்கு வட்டார தொழில் நுட்பக் குழுஅமைப்பாளரும் வேளாண்மை உதவி இயக்குனருமான் சண்முகம் தலைமையில்‌, வேளாண்மை அலுவலர் ரேணுகாதேவி அவர்களின் ஆலோசனையுடனும், துணை வேளாண்மை அலுவலர் சுப்பிரமணியம், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அலுவலர்கள் கங்காதரன் ,பத்மஸ்ரீ, நடராசன் மற்றும் கிராம முதன்மை அலுவலர்( village nodal officer) தங்கராசு உதவி வேளாண்மை அலுவலர் ஆகியோரால் கிராம அளவிலான முன்னேற்ற குழுவிற்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் வெம்பாக்கம் வட்டார தொழில் நுட்பக் குழு அமைப்பாளர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குனர் சண்முகம், மத்திய மற்றும் மாநில அரசால் விவசாயிகளுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றியும் அதன் பயன்பாடுகள் பற்றியும் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார். வெம்பாக்கம் வட்டார வேளாண்மை அலுவலர் ரேணுகாதேவி சிறுதானிய ஆண்டின் (2023) சிறப்புத்துவம் பற்றியும் சிறுதானியத்தின் சிறப்புகள் மற்றும் முக்கியத்துவத்தை பற்றியும் வேளாண் துறையில் சிறுதானியங்களுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றியும் அதன் மானியங்கள் பற்றியும் பண்ணை கருவிகள் வழங்குதல் பற்றியும் குழு விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். துணை வேளாண்மை அலுவலர் சுப்பிரமணியம் விதை நேர்த்தி, விதையை கடினப்படுத்துதல் , உயிர் உரங்கள், திரவ உயிர் உரத்தின் பயன்பாடு ஆகியவற்றைப் பற்றி தெளிவாக விவசாயிகளுக்கு விளக்கிக் கூறினார் .கிராம நோடல் அதிகாரி தங்கராசு மண்வளம் காத்தல் ,மண் பரிசோதனை, நீர் பரிசோதனை ,நீர் மேலாண்மை, கோடை உழவு ,ஆகியவற்றை பற்றியும் அதன் முக்கியத்துவத்தை பற்றியும் விளக்கிக் கூறினார் . வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அலுவலர்கள் வட்டார தொழில்நுட்ப மேலாளர் கங்காதரன். E- NAM பற்றி குழு உறுப்பினர்களிடையே விளக்கிக் கூறினார். உதவி தொழில் நுட்ப மேலாளர் பத்மஸ்ரீ உழவன் செயலி பயன்பாடுகள் மற்றும் பயன்படுத்தும் முறை உழவன் செயலிக்குள் இருக்கும் ஒவ்வொரு துறையின் செயல்பாட்டு திட்டங்கள் பற்றியும் உழவன் செயலில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள தமிழ் மண்வளம் என்பதின் பயன்பாடுகள் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார். உதவி தொழில்நுட்ப மேலாளர் நடராசன்‌ ,பிரதம மந்திரியின் பி .எம். கிசான் திட்டத்தைப் பற்றி எடுத்துக் கூறினார். இப் பயிற்சியின் போது நுண்ணூட்டக் கலவை நெல், நுண்ணூட்டக் கலவை மணிலா ,தென்னை நுண்ணூட்டக் கலவை ,ட்ரைகோ டெர்மா விரிடி, சூடோமோனாஸ், திரவ உயிர் உரம் நெல் ,அசோஸ்பைரில்லம் ,பாஸ்போ பாக்டீரியா, திரவ பொட்டாஷ் மற்றும் விசைத்தெளிப்பான்கள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு அதன் முக்கியத்துவத்தையும் மானிய விலையிலும் பெறுவதற்கான வழிகளும் கூறப்பட்டன. நிகழ்ச்சி இறுதியில் ரபி பருவத்தில் நெல் பயிரிடும் போது கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரம் மற்றும் நுண்ணூட்டக் கலவை நெல் வேளாண்மை அலுவலர் ரேணுகாதேவி குழுவின் முன்னோடி விவசாயிக்கு வழங்கப்பட்டு மற்ற விவசாயிகளுக்கும் வழங்கப்பட்டது. இரண்டு கிராமங்களிலும் இருந்தும் 50 உறுப்பினர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

Tags

Next Story