50 பேரை கடித்த வெறிநாய் - கிராமமக்கள் அச்சம்

விராலிமலை அருகே 50க்கும் மேற்பட்டோரை வெறி நாய் கடித்ததால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

விராலிமலை: தேராவூர் மேட்டுப்பட்டியில் வளர்ப்பு நாய் ஒன்று வீட்டில் இருந்து வெளியேறி தெருவில் சுற்றித்திரிந்தது. கடந்த ஒரு மாதமாக கிராமத்தை சேர்ந்த மாணிக்கம் மனைவி லட்சுமி, வெள்ளக்கண்ணு மனைவி அம்மாக்கண்ணு, அழகர், புரவி மனைவி செல்லம், ஆறுமுகம், வீரமலை, பன்னீர் உட்பட சிறுவர்கள், பெரியவர்கள் என்று சுமார் 50க்கும் மேற்பட்டோரை இந்த நாய் துரத்தி கடித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் அருகில் உள்ள கொடும்பாளூர், விராலிமலை, மணப்பாறை அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். நாயை பிடிக்க ஊராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கிராமமக்கள் அச்சத்துடன் உள்ளனர். வெறிநாயை. பிடித்து ரேபிஸ் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story