சுற்றுலாப் பயணிகளை கடித்த வெறி நாய்கள் - 10 பேர் காயம்

சுற்றுலாப் பயணிகளை கடித்த வெறி நாய்கள் - 10 பேர்  காயம்
பைல் படம்
கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களை வெறி நாய்கள் கடித்ததில் காயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக ஏராளமான நாய்கள் சாலையோரங்களில் கூட்டமாக வலம் வருகிறது. இவற்றில் சில நாய்கள் வெறி பிடித்து சாலையோரம் செல்லும் பொது மக்களை கடிக்கின்றன. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மூன்று இடங்களில் பொதுமக்கள் 10-க்கும் மேற்பட்டவர்களை வெறி நாய்கள் கடித்துள்ளது.

மகாதானபுரம் அருகே உள்ள கல்லு விளையில் மூன்று பேரை கடித்துக் குதறியது. அதேபோல் விவேகானந்தபுரம் சந்திப்பில் பெண் உட்பட நான்கு பேரை நாய் கடித்தது. இதையடுத்து கன்னியாகுமரி சர்ச் ரோடு பகுதியில் ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து சுற்றுலா வந்த 8 வயது சிறுவன் மட்றும் அவரது தந்தை உட்பட 3 பேரை வெறிநாய்க்கடித்துள்ளது. மேலும் சிலரை வெறிநாய்க்கடித்துள்ளதாக தகவல் தெரிகிறது சுற்றுலா வந்த ராஜஸ்தான் சிறுவனுக்கு முதுகு கை கால்களில் படுகாயம் ஏற்பட்டது. அவனுக்கு கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுபோல் மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்தெருநாய்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story