பொதுமக்களை கடிக்கும் வெறி நாய்கள் -நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

பொதுமக்களை கடிக்கும் வெறி நாய்கள் -நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

திருச்செங்கோடு நகராட்சி பகுதியில் ஒரே நாளில் 8 பேரை வெறி நாய் கடித்துள்ளது. என்ன செய்வது எனத் தெரியாமல் நகராட்சி நிர்வாகம் திகைத்து நிற்கும் நிலை உருவாகியுள்ளது .மனித உயிர் முக்கியமா நாய் உயிர் முக்கியமா எனத் தெரியாமல் தடுமாறுவதாகவும் கர்ப்பத்தடை செய்த பிறகு பிடிக்கப்பட்ட இடத்திலேயே விட்டாலும், வெறிபிடித்து நாய்கள், மனிதர்களை கடித்துக் குதறுவதாகவும் உரிய வழிகாட்டுதலை அரசு உருவாக்கித் தர வேண்டும் எனவும் நாய்க் கடியால் பாதிக்கப்பட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறிய பின் நகர் மன்றத் தலைவர் நளினி சுரேஷ்பாபு கூறியுள்ளார். இந்த ஆய்வின் போது திருச்செங்கோடு அரசு மருத்துவமனை மற்றும் அலுவலர் மோகன பானு, நகர் மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.


