வாக்குப்பதிவு மையங்களின் செயல்பாடுகளை ராதாகிருஷ்ணன் ஆய்வு
செயல்பாடுகளை ஆய்வு செய்த ஆட்சியர்
வாக்குப்பதிவு மையங்களின் செயல்பாடுகளை ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
இன்று (19.04.2024) நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலையொட்டி, மாவட்ட தேர்தல் அலுவலரும் கூடுதல் தலைமைச் செயலரும் ஆணையாளருமான ராதாகிருஷ்ணன் ரிப்பன் கட்டட வளாகத்தில்,
அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு மையத்தில் சட்டமன்றத் தொகுதிகளின் வாரியாக வாக்குப்பதிவு மையங்களின் செயல்பாடுகள் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுவதைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் பின்னர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
Next Story