பயன்பாட்டுக்கு வரும் ராதாநகா் ரயில்வே சுரங்கப்பாதை

பயன்பாட்டுக்கு வரும் ராதாநகா் ரயில்வே சுரங்கப்பாதை
பயன்பாட்டுக்கு வரும் ராதாநகா் ரயில்வே சுரங்கப்பாதை
ராதாநகா் ரயில்வே சுரங்கப்பாதை விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது.

குரோம்பேட்டை ராதா நகா் - ஜி.எஸ்.டி.சாலையை இணைக்கும் ரயில்வே கேட் வழியை ராதா நகா், சாந்தி நகா், பாரதிபுரம், கணபதி புரம்,குறிஞ்சி நகா், ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் பயன்படுத்தி வந்தனா்.

ரயில் போக்குவரத்து காரணமாக அடிக்கடி ரயில்வே கேட் மூடப்படும் போது, ஜி.எஸ்.டி. சாலை மற்றும் ராதா நகா் பிரதான சாலை இருபுறமும், வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நிற்கும். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் நீண்ட நேரம் காத்து இருக்கும் நிலை ஏற்படுகிறது.

இதன் காரணத்தால் மக்களின் சிரமத்தை போக்கும் வகையில், ராதாநகரில் இருந்து ரயில்வே தண்டவாளங்களைக் கடந்து ஜி.எஸ்.டி.சாலை செல்ல , ரயில்வே சுரங்கப்பாலம் அமைக்கும் பணி ரூ.16 கோடியில் 2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தொடா்ந்து நடைபெற்று வருகிறது. குரோம்பேட்டை ஜி.எஸ்.டி.சாலையில் இருந்து ரயில்வே சுரங்கப்பாதை வழியாக ராதாநகா் செல்ல ஜி.எஸ்.டி.சாலையோரம் 5.5மீட்டா் அணுகு சாலை, ராதாநகரில் இருந்து ஜி.எஸ்.டி சாலைக்கு செல்ல 5.5மீட்டா் அணுகு சாலை, உயா் நடை மேம்பால மின்தூக்கி அமைக்க காங்கிரீட் கட்டமைப்பு உள்ளிட்ட கட்டுமான பணிகள் இதுவரை 70 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு இன்னும் 3 மாதத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, சுரங்கப்பாதை பணிகளை பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினா் இ.கருணாநிதி ஆய்வு செய்தாா். 3 மாத காலத்தில் அனைத்து பணிகளும் முழுமையாக நிறைபெற்று, வரும் மே மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப் படும் என்று அவா் அப்போது தெரிவித்தாா்.

Tags

Next Story