ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் தீவிரம் !

ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் தீவிரம் !

பிரச்சாரம் 

பாஜக வேட்பாளராக நயினார் நாகேந்திரன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் மீனவ கிராமங்களில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக நயினார் நாகேந்திரன் போட்டியிடுகின்றார். அவர் தினம்தோறும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் இன்று (ஏப்.3) காலை ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள மீனவ கிராமங்களில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். இதில் முதல் கிராமமான நவ்வலடியில் பொதுமக்களிடம் தாமரை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு ஆதரவு கேட்டார். இதில் பாஜகவினர், கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story