தென்னம்பாளையம் மார்க்கெட்டில் முள்ளங்கி விலை உயர்வு

தென்னம்பாளையம் மார்க்கெட்டில் முள்ளங்கி விலை உயர்வு

முள்ளங்கி (பைல் படம்)

திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் வரத்து குறைவால் முள்ளங்கி விலை உயர்வை சந்தித்தது.
திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் உள்ள தினசரி மார்க்கெட்டிற்கு திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமல்லாது வெளி மாவட்டங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. நேற்றைய தினம் தென்னம்பாளையம் மார்க்கெட்டிற்கு முள்ளங்கி வரத்து குறைந்ததன் காரணமாக விலை அதிகரித்து காணப்பட்டது. வழக்கமாக திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் முள்ளங்கி விற்பனைக்கு கொண்டுவரப்படும் ஆனால் விளைச்சல் பாதிக்கப்பட்டு இருப்பதன் காரணமாக . வரத்து குறைந்தது. இதனால் தர்மபுரி உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து முள்ளங்கி கொண்டுவரப்பட்டிருந்தது. வழக்கமாக 25 கிலோ எடை கொண்ட மூட்டை 300 முதல் 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்படக்கூடிய நிலையில் நேற்றைய தினம் 900 முதல் 1000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

Tags

Next Story