ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழ்நாடு அரசு தட்டச்சு தேர்வு
குமாரபாளையம் ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழ்நாடு அரசு தட்டச்சு தேர்வு
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழ்நாடு அரசு மூலம் தட்டச்சு தேர்வு நடைபெற்றது நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் ஸ்ரீ ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழ்நாடு அரசு தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் சார்பாக இளநிலை மற்றும் முதுநிலை தட்டச்சு தேர்வுகள் 24 2 2024 மற்றும் 25 2 2024 ஆகிய நாட்களில் ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது. இதில் 26க்கும் மேற்பட்ட தட்டச்சு பயிற்சி மையங்களில் இருந்து 1300 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு தட்டச்சு தேர்வு எழுதினர். தற்போது தமிழக அரசு வேலை வாய்ப்பில் அதிக அளவு தட்டச்சு தொடர்பான வேலைவாய்ப்பு அதிக அளவில் உள்ளதால் மாணவ மாணவிகள் அரசு வேலை வாய்ப்பு பெறுவதற்காக ஆர்வத்துடன் இந்த தேர்வு எழுதினார்கள் இதற்கு ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் எஸ் விஜயகுமார் அவர்கள் தமிழ்நாடு அரசின் மூலம் முதன்மை கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டு அவரது மேற்பார்வையில் தேர்வுகள் நடைபெற்றது.
Next Story