குற்றாலத்தில் சிறுவன் உயிரை பறித்த கொடூர சம்பவம்

குற்றாலத்தில் சிறுவன் உயிரை பறித்த கொடூர சம்பவம்
 பழைய குற்றால அருவியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 17 சிறுவன் உயிரிழந்த சம்பவம் சுற்றுலா பயணிகளிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பழைய குற்றால அருவியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 17 சிறுவன் உயிரிழந்த சம்பவம் சுற்றுலா பயணிகளிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் பழைய குற்றால அருவியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 17 சிறுவன் சிக்கி மாயமான நிலையில், இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சுற்றுலா பயணிகளிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக குற்றால அருவிகளான பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளின் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓடிள்ளனர். இதில் திருநெல்வேலி மாவட்டம் என்.ஜி .ஓ காலனி பகுதியைச் சேர்ந்த 17 வயது அஸ்வின் என்ற சிறுவன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மாயமானான். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் ஆகியோர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவனை மீட்கும் பணியில் காவல்துறையினர் தீயணைப்பு துறையினர் தொடர்ந்து ஈடுபட்டனர். இந்த நிலையில் இரண்டு மணி நேரத்தில் தேடுதலுக்கு பின்னர் பழைய குற்றால அருவியில் இருந்து சிறிது நேரம் தொலைவில் பாறையில் இடுக்கில் சிறுவன் இருப்பதை உள்ளூர் மக்கள் பார்த்துள்ளனர். இதனை தொடர்ந்து உள்ளூர் மக்கள் உதவியுடன் சிறுவனை தீயணைப்பு துறையினர் மீட்க சென்ற நிலையில் தலை மற்றும் மற்றும் மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். சடலமாக மீட்கப்பட்ட நிலையில் அவரது உடலை உடற்கூறு பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருக்கும் போது ஒரு சில நிமிடங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிறுவன் சிக்கி உயிரிழந்த சம்பவம் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story