ஸ்ரீ பால குஜாம்பிகை கோவிலில் ராகு கால பூஜை
திருவண்ணாமலை மாவட்டம், திருவத்திபுரம் ஸ்ரீ பால குஜாம்பிகை உடனுறை வேதபுரீஸ்வரர் கோவிலில் இன்று ராகு கால பூஜை நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த திருவத்திபுரம் நகராட்சியில் அமைந்துள்ள ஸ்ரீ பால குஜாம்பிகை உடனுறை வேதபுரீஸ்வரர் கோவிலில் இன்று ராகு கால பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது.
சிவனுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்து மகா தீபாரனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story