ராகுல் காந்தி பிறந்தநாள் : கோவிலில் காங்கிரஸ் நிர்வாகிகள் சிறப்பு பூஜை

ராகுல் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு ராசிபுரம் நகர காங்கிரஸ் சார்பில் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தியின் 54வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ராசிபுரம் அருள்மிகு ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவிலில் ராகுல் காந்தி பெயரில் விசேஷ பூஜை ,மற்றும் அர்ச்சனை செய்யப்பட்டு பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் இனிப்புகள், பிரசாதங்கள் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் நகர காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஸ்ரீராமுலு ஆர்.முரளி, முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் பாச்சல் சீனிவாசன், நகர காங்கிரஸ் துணைத் தலைவர் பழனிச்சாமி, மதுரை வீரன், நகர காங்கிரஸ் பொருளாளர் மாணிக்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story