ராகுல் காந்தி பிறந்த நாள் விழா காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டம்

சங்ககிரி: ராகுல் காந்தி பிறந்த நாள் விழா காங்கிரஸ் கட்சியினர் சிறப்பு வழிபாடு செய்து கொண்டாட்டம்....
சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி பிறந்த நாள் விழா சங்ககிரியில் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. ராகுல்காந்தி பிறந்தநாளையொட்டி அருள்மிகு தில்லைவிநாயகர் சுவாமிக்கு பல்வேறு திவ்யபொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதில் சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சி.எஸ்.ஜெய்க்குமார் தலைமையில் நிர்வாகிகள் கலந்து கொண்டு ராகுல்காந்தி பெயரில் அர்ச்சனை செய்து வழிப்பட்டனர். பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். அப்போது நகரத்தலைவர் எ.ரவி, நிர்வாகிகள் காசிலிங்கம்,மணி, அங்கமுத்து, சின்னுசாமி, ராமமூர்த்தி, சுப்ரமணியம், நடராஜன், பரமன், ரவி, ஆறுமுகம், ஜெகநாதன், குமார், விஸ்வநாதன், கிரி, காமராஜ் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story