தண்டவாளம் பராமரிப்பு பணிகள்

வஞ்சிபாளையத்தில் தண்டவாளம் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் வந்தே பாரத் உட்பட எட்டுக்கும் மேற்பட்ட ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது.

வஞ்சிபாளையத்தில் தண்டவாளம் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் வந்தே பாரத் உட்பட 8-க்கும் மேற்பட்ட ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கோவை மற்றும் திருப்பூருக்கு கல்லூரி மற்றும் பணிக்கு செல்பவர்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். கொங்கு மண்டலத்தில் தொழில் நகரங்களான திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வந்து செல்கின்றனர், குறிப்பாக கோவையிலிருந்து தினமும் காலை இன்டர்சிட்டி, வெஸ்ட் கோஸ்ட், நாகர்கோவில், திருச்சி மற்றும் லோகமான்ய திலக் ஆகிய ரயில்களில் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பணிக்கு வருகின்றனர், அதேபோன்று திருப்பூரில் இருந்து கல்லூரி மற்றும் பணிகளுக்காக பாலக்காடு MEMU, மங்களூர், ரப்தீசாகர் மற்றும் தன்பாத் ஆகிய ரயில்களில் ஆயிரக்கணக்கானோர் பயணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் வஞ்சிபாளையம் ரயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் பல்வேறு ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை, பராமரிப்பு பணிகள் மேற்கொண்டுள்ளதால் வந்தே பாரத் உட்பட அனைத்து ரயில்களும் ஆங்காங்க நிறுத்தப்பட்டுள்ளது. வழக்கத்திற்கு மாறாக 2 மணி நேரம் வரை ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. இதன் காரணமாக திருப்பூருக்கு பணிக்கு வரும் கோவை மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பலர் வேலையின்றி மீண்டும் திரும்பிச் சென்றனர், தின ஊதியம் பெரும் தொழிலாளர்கள் காலை 9:00 மணிக்கு திருப்பூர் வந்து ஆங்காங்கே வேலைக்கு செல்வார்கள், இதுபோன்ற தாமதங்களால் அவர்களுக்கு அன்று வேலை இழக்கும் சூழ்நிலை உருவாகும், எனவே இது போன்ற பராமரிப்பு பணிகளை காலை 10 மணிக்கு மேல் ரயில்வே துறை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அவ்வப்போது பராமரிப்பின் போது இது போன்ற நடைபெறுவதாகவும் குற்றம் சாட்டினார்கள். திருப்பூர் ரயில் நிலையத்தில் காலை முதலே பலர் வெளியூருக்கு செல்ல வெகு நேரமாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Tags

Next Story