ரயில் மறியல் வழக்கு - ராஜேஷ் குமார் எம்எல்ஏ கோர்ட்டில் ஆஜர்
கடந்த 2019 ஆம் ஆண்டு கர்நாடகாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடி குறித்து பேசிய கருத்துகள் தொடர்பாக குஜராத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த குஜராத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2023-ல் இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்தது. அப்போது ராகுல் காந்தியின் எம் பி பதவியும் பறிக்கப்பட்டது. இதை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.
குமரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பிலும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் குழித்துறையில் ராஜேஷ்குமார் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இந்த ரயில் மறியல் போராட்டம் தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ராஜேஷ்குமார் எம்எல்ஏ உள்ளிட்ட கண்டால் தெரிய நபர்கள் மீது வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு விசாரணை தற்போது நாகர்கோவில் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதற்கட்டமாக ஒன்பது மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ராஜேஷ்குமார் எம்எல்ஏ மற்றும் மேற்கு மாவட்ட தலைவர் பினுலால் சிங் உட்பட காங்கிரஸ் நிர்வாகிகள் நேற்று நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி வருகிற 29ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.