ஆரல்வாய்மொழியில் 5 ஆண்டுகளாக பாதியில் நிற்கும் ரயில்வே பாலப்பணி

ஆரல்வாய்மொழியில் 5 ஆண்டுகளாக பாதியில் நிற்கும் ரயில்வே பாலப்பணி

பாலம் கட்டும் பணி 

ஆரல்வாய்மொழியில் 5 ஆண்டுகளாக பாதியில் நிற்கும் ரயில்வே பாலப்பணிமை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி சுபாஷ்நகர் பகுதியில் ரெட்டை ரயில் பாதைக்காக ஏற்கனவே இருந்த பாலம் இடிக்கப்பட்டு புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்றது. ஆனால் அந்த பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டு ஐந்து ஆண்டுகள் ஆகியும் பின்னர் தொடங்கப்படவில்லை.

பாலத்தை இடித்ததால் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் பொதுமக்கள் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு இடையே ரெட்டை ரயில் பாதை நிறைவடைந்து ரயிலும் அந்த வழி இயங்கி வருகிறது. ஆனால் பாலம் தான் முடியாமல் நிற்கிறது என்று பொதுமக்கள் தங்களது மன குமுறலை தெரிவித்த நிலையில் நேற்று முன்தனம் திடீரென்று சில கனரக வாகனங்களும் பொக்லைன் இயந்திரமும் அங்கு வந்து ஏற்கனவே பாலப்பணிக்காக தோண்டப்பட்ட செம்மண் குவியலை அகற்ற வந்தனர்.

இதை பார்த்த தொழிற்பேட்டை பகுதியை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த மண் பாலப்பணி முடிந்த பிறகு பள்ளத்தை நிரப்ப தேவைப்படும் என்று பொதுமக்கள் கேட்டதால், நாகர்கோவில் ரயில் நிலையத்திற்கு பள்ளத்தை நிரப்ப கொண்டு செல்கிறோம் என்றார்கள். மேலும் இது குறித்த தகவல் ஆரல்வாய்மொழி போலீஸிற்கு சென்றது. உடனே போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று அனுமதி ஆவணத்தை காண்பித்து விட்டு மண்ணை எடுத்து செல்ல கூறினார்கள்.

இதனால் பின்னர் அந்த மண் அங்கிருந்து அகற்றப்படவில்லை. ஆனால் நேற்று அப்பகுதியில் இருந்து வாகனங்களில் மண் எடுத்துச் செல்லப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story