ரயில்வே கிராசிங் கேட் பழுது - போக்குவரத்து துண்டிப்பு

ரயில்வே கிராசிங் கேட் பழுது - போக்குவரத்து துண்டிப்பு
 போக்குவரத்து பாதிப்பு
மார்த்தாண்டம் விரிகோடு ரயில்வே கிராசிங் கேட் திடீரென பழுதானதால் சுமார் 6 மணி நேரத்திற்கும்மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் விரிகோடு ரயில்வே கிராசிங் கேட் நேற்று இரவு வரை திறக்க முடியாமல் பழுதடைந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. கன்னியாகுமரி - திருவனந்தபுரம் ரயில்வே மின் பாதையில் துண்டிப்பு ஏற்பட்டதால் நேற்று காலை 11:30 மணி முதல் மாலை 6 மணி வரை ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதன் பிறகு வரிசையாக ரயில்கள் சென்று கொண்டிருந்தன. இந்த நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் கொல்லத்திலிருந்து குழித்துறை வழியாக சென்னைக்கு அனந்தபுரி ரயில் சென்றது. இதற்காக மார்த்தாண்டம் - கருங்கல் சாலையில் உள்ள விரிகோடு ரயில்வே கேட் மூடப்பட்டது. இதனால் இருபுறமும் ஏராளமான பஸ்கள் மற்றும் வாகனங்கள் வரிசையாக நின்றன. ரயில் சென்ற பிறகு அந்த பகுதியில் ரயில் ஊழியர்கள் கேட்டை திறக்க முயற்சி செய்தபோது திறக்க முடியவில்லை. இதனால் மார்த்தாண்டத்திற்கும் கருங்கலுக்கு இடைப்பட்ட தடத்தில் போக்குவரத்து முழுமையாக முடங்கியது. மார்த்தாண்டத்தில் இருந்து வாகனங்கள் பள்ளியாடி வழியாக திருப்பி விடப்பட்டது. இரவு எட்டு மணி வரை இந்த ரயில்வே கேட்டு திறக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இந்த கேட் அடிக்கடி இது போன்று பழுதடைந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.

Tags

Next Story