பயனாளிகளிடம் ஒருமையில் பேசிய ரயில்வே ஊழியர் - வீடியோ வைரல்

பயனாளிகளிடம் ஒருமையில் பேசிய ரயில்வே ஊழியர் - வீடியோ வைரல்

வீடியோ வைரல் 

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் பகுதியில் திருக்கோவிலூர் ரயில் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த ரயில் நிலையத்தில் விழுப்புரத்தில் இருந்து காட்பாடி வழியாக திருப்பதி செல்லும் பயணிகள் ரயில் தினசரி 6 மணிக்கு செல்வது வழக்கமாக இருந்து வருகிறது . இங்கு வரும் ரயில் பயணிகளை எப்பொழுதுமே இங்கு பணி புரியும் ஊழியர்கள் ஒருமையில் பேசுவதும் ,ஆபாசமாக திட்டுவதும் வாடிக்கையாக இருந்து வரும் நிலையில் நேற்று மாலை திருப்பதி செல்வதற்காக பயணிகள் டிக்கெட் எடுப்பதற்கு டிக்கெட் கேட்டபோது அவர்களை கொஞ்சம் கூட மதிக்காமல் ஊழியர் அவர் வேலையை பார்த்துக் கொண்டு இருந்துள்ளார். ரயில் வருவதற்கு நேரம் ஆனதால் உங்கள் வேலையை அப்புறம் பார்த்துக் கொள்ளுங்கள், எங்களுக்கு ரயில் டிக்கெட் வழங்குங்கள் என எத்தனை முறை நாங்கள் கேட்கிறோம் நீங்கள் காதிலேயே வாங்கிக் கொள்ள மாட்டீர்களா என கேட்டபோது ஆவேசம் அடைந்த ஊழியர் இங்கு வந்து தான் சட்டம் பேசுவீங்களா ,ஊர்ல அதிகாரிகள் ஊருக்கே வரமாட்டான் ,அங்க போய் பேச மாட்டீங்களா 500 ரூபாய் கொடுத்து பஸ்ல திருப்பதிக்கு போங்க என சம்பந்தம் சம்பந்தமில்லாமல் எங்கோ ஊருக்கு செல்ல வந்த பயணிகளிடம் காட்டமாக கொஞ்சம் கூட மரியாதை இல்லாமல் ரயில் பயணிகளை அவ மரியாதையாக பேசும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story