ரயில்வே பணியாளர்கள் நான்காவது நாளாக உண்ணாவிரதம்

பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துமாறு வலியுறுத்தி ஒசூர் ரயில்வே பணியாளர்கள் நான்காவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஒசூர் இரயில்வே நிலையத்தில் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி 4வது நாளாக இரயில்வே ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் ரயில்வேநிலைய வளாகத்தில் தென்மேற்கு மஸ்தூர் யூனியனை சேர்ந்த இரயில்வே துறை அரசு ஊழியர்கள் 4வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.. 450 இரயில்வே தொழிலாளர்கள் ஜனவரி 8 முதல் இன்று 4வது நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுக்குறித்து தென்மேற்கு மஸ்தூர் யூனியன் கோட்ட செயலாளர் ராகவேந்திரா பேசுகையில்: 2004 க்கு பிறகு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு பணி ஓய்வு பெற்றால் பென்சன் திட்டமில்லை அவர்களின் ஊதியத்தை பிடித்தம் செய்து, அதில் 60% பணத்தை செண்டில்மெண்டாகவும் 40% பணத்தை பங்குசந்தையில் செலுத்தி லாபம் கிடைத்தால் ஓய்வூதியம் என்கிறார்கள் 2004க்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களுக்கு ஓய்வுப்பெற்ற பிறகு செண்டில்மெண்ட் பணத்துடன் ஓய்வூதியம் கிடைக்கிறது அவருக்கு பிறகு மனைவி, விவாகரத்தான மகள் உள்ளிட்டோருக்கு ஓய்வூதியம் கிடைக்கும் சட்டம் உள்ளது.. "ஒரே நாடு, ஒரே தேர்தல்" என கூறும் மத்திய அரசு, ஒரே பணியில், ஒரே ஓய்வூதியம் என நாங்கள் கேட்பதில் என்ன தவறு என பேசியதுடன் மத்திய அரசிற்கு எதிராக இரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று 99%பேர் வாக்களித்திருப்பதால் அதற்குறித்தும் திட்டமிட்டு வருவதாக கூறினார்...

Tags

Next Story