ஊட்டுவாழ்மடத்தில் ரயில்வே கேட் மூடல்
ஊட்டுவாழ்மடம்பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெறுவதால் நேற்று நள்ளிரவு முதல் ரயில்வே கேட் மூடப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் அருகே ஊட்டுவாழ் மடம், கருப்பு கோட்டை, இலுப்பையடி போன்ற கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 500 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த கிராம மக்களின் வசதிக்காக சுரங்கப்பாதை அமைக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர். இதை ஏற்று சுமார் ரூபாய் 4.5 கோடியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டு கடந்த ஆண்டு ஜூன் மாதம் பணிகள் தொடங்கின. ஆறு மாதங்களில் பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பல்வேறு பிரச்சனைகள் காரணமாக சுரங்கப்பாதை பணிகள் நிறைவு பெறாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் தற்போது மீண்டும் மூன்று நாட்களாக மீண்டும் வடிவீஸ்வரத்திலிருந்து ஊட்டுவாழ்மடம் வரும் பகுதியில் பணிகள் தொடங்கியுள்ளன. எந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் ரயில்வே கேட் மீண்டும் மூடப்பட்டுள்ளது. இப்போது ரயில் தண்டவாளம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
Next Story