ரயில்வே கேட் ஒயர் அறுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

ஆனங்கூர் ரயில்வே கேட் ஒயர் அறுந்ததால் கேட் திறக்க முடியாத நிலையால் போக்குவரத்து பாதிப்பு
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்துள்ள ஆனங்கூர் பகுதியில் கோவை, ஈரோடு, சேலம், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் வகையிலான ரயில்வே இருப்புப்பாதை அமைந்துள்ளது. ரயில்வே இருப்பு பாதையினை ஈரோட்டில் இருந்து சேலம் செல்லும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் இரண்டு சக்கர வாகனங்களில் செல்வோர் இந்த பாதையை கடந்து தான் செல்ல வேண்டும். தற்பொழுது ஈரோட்டிலிருந்து பள்ளிபாளையம் வழியாக திருச்செங்கோடு செல்லும் சாலையில் கன்னியாகுமரி முதல் சென்னை வரையிலான சாலை பணிகள் நடந்து வருவதால், தற்போது ஆனங்கூர் ரயில்வே கேட் பாதையே பிரதான சாலையாக அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை 11 மணி அளவில் ரயில்வே இருப்பு பாதையில் ரயில் சென்ற பொழுது ரயில்வே கேட்டை அடைத்தனர். பின்னர் கேட்டை அதன் கேட் கீப்பர் திறக்க முயன்ற பொழுது கேட்டினை இணைத்து இருக்கும் ஒயர் அருந்ததால் கேட் திறக்க இயலவில்லை. இதன் காரணமாக வாகனங்கள் ஏதும் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் அனைவரும் சேலம் மாவட்டம் சங்ககிரி சென்று மீண்டும் திருச்செங்கோடு செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு நேரமும் எரிபொருள் விரயம் ஏற்படும் அவலம் காரணமாக பொதுமக்கள் மிக விரைவில் இந்த ரயில்வே கேட்டினை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ஒரு மணி நேரத்துக்கு மேலாக ரயில்வே ஊழியர்கள் பழுதினை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதன் பின்னர் சுமார் 4 மணி நேரத்திற்கு பிறகு ரயில்வே கேட் போக்குவரத்து சீரமைக்கபட்டது.

Tags

Next Story