ரயில்வே ஹாக்கி போட்டி: சென்னை அணி வெற்றி

ரயில்வே ஹாக்கி தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றிப் பெற்றது.

ரயில்வே ஹாக்கி போட்டி இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றி தெற்கு ரயில்வே அளவிலான ஹாக்கி விளையாட்டு போட்டி தொடரின் இறுதிப் போட்டிகள் புதன்கிழமை (நவம்பர் 29) நடைபெற்றது.

மதுரை ரேஸ்கோர்ஸ் எம்ஜிஆர் நவீன விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இறுதி போட்டியில் சென்னை மற்றும் மதுரை அணிகள் மோதின. இதில் சென்னை அணி நான்கு கோல்கள் போட்டு வெற்றி பெற்றது. மதுரை அணி ஒரு கோல் போட்டு வெற்றி வாய்ப்பை இழந்தது. வெற்றி பெற்ற சென்னை அணி தலைவர் மனோஜிடம் வெற்றிக் கோப்பையை வழங்கி கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா பாராட்டினார்.

ரன்னர் அணிக்கான கோப்பையை மதுரை அணி தலைவர் சுரேஷ் கோட்ட ரயில்வே மேலாளரிடம் இருந்து பெற்றுக் கொண்டார். ‌ பரிசளிப்பு நிகழ்ச்சியில் கோட்ட ஊழியர் நல அதிகாரி டி. சங்கரன், உதவி ஊழியர் நல அதிகாரி இசக்கி, தெற்கு ரயில்வே விளையாட்டு அமைப்பு நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story