ரயில்வே நிர்வாகம் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும்:டிக்கெட் பரிசோதகர்கள்
அஞ்சலி செலுத்திய ஊழியர்கள்
கோவை:கடந்த செவ்வாய் கிழமையன்று பாட்னா எக்ஸ்பிரஸ் ரயிலில் வினோத் என்ற டிக்கெட் பரிசோதகர் பணியில் இருந்த போது முன்பதிவு பெட்டியில் குடிபோதையில் இருந்த வட மாநில நபர் டிக்கெட் இன்றி பயணம் செய்து கொண்டிருந்துள்ளார்.
அவரை அன் ரிசர்வ் பெட்டிக்கு செல்லுமாறு வினோத் கூறுகையில் குடி போதையில் இருந்த நபர் அதனை மறுத்தால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்திற்கு இடையே குடி போதையில் இருந்த நபர் வினோத்தை ரயிலில் இருந்து வெளியே தள்ளி விட்டதில் வினோத் அருகாமையில் உள்ள தண்டவாளத்தில் விழுந்தார்.அச்சமயம் அந்த தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்த மற்றொரு ரயில் அவர் மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அப்போது ரயிலில் பயணம் செய்த பயணிகள் குடிபோதையில் இருந்த அந்த வட மாநில நபரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.இந்நிலையில் மறைந்த டிக்கெட் பரிசோதகர் வினோத்திற்கு இன்று கோவை ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகர்கள் அஞ்சலி செலுத்தினர்.ரயிலில் நடைபெற்ற சம்பவத்திற்கு,
கண்டனங்களை பதிவு செய்தவர்கள் வடமாநில நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வரும் காலங்களில் டிக்கெட் பரிசோதகர்களுக்கு இரயில்வே நிர்வாகம் உரிய பாதுகாப்பு வழங்கி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமெனவும் துப்பாக்கி ஏந்திய RPF போலிஸ் பாதுகாப்பு வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.